Channel Avatar

Kandathai Pakir @[email protected]

2K subscribers - no pronouns :c

World cinema lover and freelance movie review. The purpose o


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Kandathai Pakir
Posted 8 months ago

சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவென் , சாங்ஸ் ஆஃப் ஸ்பாரோ போன்ற படத்தை எடுத்த Majid Majidi, பசங்களோட எதார்த்த நடிப்ப பாரபட்சமின்றி இயல்பா கொண்டு வரதுக்கு எந்த அளவுக்கு மெனக்கட்டாரோ, அதே அளவுக்கு வாழை படத்துல மாரி அவர்கள் முயற்ச்சி செஞ்சு செஞ்சுருகாரு.
எப்படி இந்த அளவுக்கு எதார்த்தமா அந்த பையன நடிக்க வெக்க முடிஞ்சது, எவ்வளவு ஹோம் ஒர்க் இருந்துருக்கணும்ன்னு பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துச்சு.
அப்பேற்பட்ட சத்யஜித்ரே அவர்கள், மஹாநகர் என்கிற பிக் சிட்டின்ற படத்துல, ஒரே ஒரு சீன்ல சின்ன பையன் கேமெரா பாக்கும் போது, என்னம்மோ அது மட்டும் உறுத்தலா இருக்கும். மத்தபடி சத்யஜித்ரே படங்கள விமர்சனம் செய்ற அளவுக்கு யாருக்கும் கண்டிப்பா தகுதி இல்ல. பிரம்மாண்ட எதார்த்தம் கொண்ட இயக்குனர். அவரே லைட்டா அந்த ஒரு இடத்துல ஜெர்க் ஆகிட்டார்ன்னு தோணும்.

பட் இந்த படத்துல, எக்ஸ்பீரியன்ஸ் ஆன பையன் கிடையாது, சின்ன ஷாட்ல கூட பதட்டப்படாம நடிச்சுருக்கான், இந்த பையன் ஒருத்தன் தான் படத்தையே தூக்கி சுமந்தான்னு சொல்லணும்.

சுப்ரமணியபுரம் படத்துல ஜெய்யோட அம்மாவா எதார்த்தமா நடிச்சுருப்பாங்க.
1000 படத்துல நடிச்ச அளவுக்கு எக்ஸ்பீரியன்ஸ் இந்த அம்மாக்கு போல, என்னமா நடிச்சிருக்காங்க. இந்த மாதிரி கேரக்டர்ல சரிதா லட்சுமி எல்லாம் வெளுத்து வாங்குவாங்க, இவங்க அவங்களுக்கு சரிசமம்மா நடிச்சிருக்காங்க, முக்கியமா வாழ்ந்துருக்காங்கன்னு சொல்லணும்.

படத்தோட க்ளைமேக்ஸ் பல பேருக்கு ரொம்ப கஷ்டத்த கொடுத்துச்சு, வேதனை கொடுத்திச்சுன்னு சொன்னாங்க.
எனக்கு, கல்லூரி படத்துல வர க்ளைமேக்ஸ் உண்மை சம்பவத்தை அடிப்படையா எடுக்க பட்டுச்சு. அதுல வர பாதிப்பு எனக்கு இதுல வரல. அதனால என்னை ஊற விட்டு ஒதுக்கிடாதீங்க.

என்னடா பையன் மிஸ்ஸ சைட் அடிக்கிறான் என்ன பொறப்புன்னு பல பேர் எழுதுனத பாத்தேன்.

எல்லார் வாழக்கைளையும் இப்படி ஒரு அன்பு இருக்கும், கொஞ்சம் காமம் எட்டி பாக்கும். அத பக்குவமா ஹாண்டில் பண்றது தான் ஆசியர்யர்களோட கடமை.

ப்ளஸ் ஒன் படிக்கிறேன், அப்போ தான் கோஎட் ஸ்டார்டிங். அரும்பு மீசை துளிருது. போர்ட்ல எழுதுன பெண் ஆசிரியரோட துணி விலகி, சில காட்சிகளை பாக்க நேறிடுது. அத கவனிச்ச என்னோட டீச்சர், மறுபடியும் போர்ட்ல எழுதிட்டே, கவனம் படிப்புல இருக்கட்டும், எந்த சிந்தனையும் இந்த வயசுக்கு ஏத்தது இல்ல. மனச பக்குவமா வெச்சிக்கோங்கன்னு சொன்ன அடுத்த நொடி நான் தெளிவானேன்.

எவ்வளவு பெரிய மனசு அவங்களுக்கு. என்னை அடிச்சு பெஞ்ச் மேல நிக்க வெக்காம, அசிங்கப்படுத்தாம, ஏதோ ஒரு விதத்துல காயப்படுத்தாம, என் மன நிலைய புரிஞ்சி பேசுன அந்த டீச்சர, அம்மா ஸ்தானத்திலிருந்து பாக்க ஆரம்பிச்சேன். எல்லார் வாழ்க்கைலயும் இப்படி சில சம்பவங்கள் நடக்கும், நடக்காமாலும் இருக்க வாய்ப்பும் இருக்கு.

சில கம்மர்ஷியல் எலிமெண்ட்ஸ் இல்லனா இந்த படம் சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவேன்னுக்கு ஈக்வலான படம்.

பரியேறும் பெருமாள்க்கு அப்புறம் இந்த படம் கண்டிப்பா மனசுல இடம் பிடிச்சிருக்கு.

பின்குறிப்பு: என் அப்பா தான் வாழை பழம் வாங்கி வருவார் வாரத்துக்கு ரெண்டு வாட்டியாது.
பழம் ரொம்ப பழுத்துச்சுன்னா ஒன்னு மாட்டுக்கு போடுவேன் இல்ல மாடு வரலைன்னா குப்பை தொட்டில போடுவேன். இனி ஒன்னு மாட்டுக்காக வெயிட் பன்னுவேன், சப்போஸ் மாடு வரலைன்னா நானே கண்ண மூடி சாப்ட்ருவேன். குப்பைல போடமாட்டேன்.

5 - 1

Kandathai Pakir
Posted 9 months ago

எங்க வீட்டுல இருந்து ரெண்டு வீடு தள்ளி ஒரு வயசானவர் இறந்து போனார் சில வருஷம் முன்ன. அவர் ஒரு ப்ரைவேட் ஹாஸ்பிடல்ல வேலை பாத்தவர். இறந்துபோனதும் நல்லடக்கம் பண்ணாங்க சில வானவேடிக்கையோட. பதினாறாவது நாள் காரியம் அப்போ தெரு வாசல்ல கூத்து கட்டி ஆடிட்டு இருந்தாங்க. பக்கத்தில போஸ்டர் ஒன்னு பாத்தேன்.
அதுல அவர், கூத்து ட்ரூப்ல பெரிய தலன்னு பாத்ததும் லைட்டா ஷாக் ஆனேன். அவருக்காக, அவரோட ட்ரூப்ல இருந்த சகாக்கள் பதினாறாம் காரியத்த,
கூத்து மூலமா அஞ்சலி செஞ்சாங்க.
முதல் முறை பாத்தேன் கூத்த. ரொம்ப ஜாலியா போச்சு. சிலது எல்லாம் டீப்பா கவனிக்கணும் அவங்க பேசுற ஸ்லாங் எல்லாம். என்னமோ சலிப்பே இல்லாம அவங்க பன்ன நகைச்சுவைல சில நிமிடம் பைக்க நிருந்தி பாத்தேன். அப்புறம் ஒரு இருபது நிமிஷத்துல கிளம்பிட்டேன்.

நம்ம முகநூல்ல முத்துன்னு ஒரு நண்பர் ஜமா அப்படின்னு ஒரு படத்த பத்தி பதிவு போட்டுருந்தார். அவரோட விமர்சனம் பாத்து, சரி பாக்கலாம்னு முடிவு பண்ணேன். பட் டைம் செட் ஆகல. ரொம்ப கம்மி ஷோஸ். ஒரு வழியா இன்னிக்கு 3 மணி ஷோ போக சந்தர்ப்பம் கிடச்சுது. அண்ட் அந்த ஒரு ஷோ தான் எனக்கு நியர் பை இருக்கு.

ஆரம்பத்துல சொன்னேன்ல, கூத்து பாத்தேன், ஜாலியா போச்சு அப்புறம் இருபது நிமிஷத்துல கிளம்பிட்டேன்னு.
இனி அந்த தவற செய்ய மாட்டேன். இந்த ஜமா என்ற திரைப்படம் பாத்த பிறகு, முழுசா இனி பாக்கனும்னு முடிவு பண்ணேன், மறுபடியும் கூத்து பாக்க சந்தர்ப்பம் கிடைச்சா.


வழக்கமான சில பார்முலாவா இருந்தாலும், கூத்துக்கு பின்னால இருக்குற சில வாழ்கைகளையும், அரசிலையும், வஞ்சகங்களையும், எதார்த்தங்களையும் சலிப்பே இல்லாம படத்த கொடுத்திருக்கார் டைரக்டர் vs நடிகருமான
பாரி இளவழகன்.

கதை ஆரம்பிக்கும் போது, எதுக்குயா இந்த ஆளு, மாமாவ அண்ணன்னு கூப்பிடுறான். இந்த பொண்ணு ஏன் இந்த மூஞ்ச தொரத்தி தொரத்தி லவ் பண்ணுது, எதுக்கு இந்த ட்ரூப்லயே கட்டிக்கிட்டு அழுறான், என்னடான்னு நினைச்சேன். இது எல்லாதுக்கும் விடை கொடுத்தார் டைரக்டர்.

சிறந்த படங்களுக்கு நாம தான் கை பிடிச்சு
தூக்கி விடனும்.
ஓ ஓ ஆஹா படம் எல்லாம் இல்ல. ஆனாலும் இது வொர்த்தான படம் தான்.

ஜமா, விருதை நோக்கி….

13 - 0

Kandathai Pakir
Posted 1 year ago

Rest in peace #bavatharani

1 - 1

Kandathai Pakir
Posted 1 year ago

The great actor En Uyir Thozhan Babu passed away….

3 - 1

Kandathai Pakir
Posted 2 years ago

இதுவரைக்கும் நாலு பாட்டுக்கு மட்டும் கண்கலங்கிருக்கேன், அதுல ஒன்னு தான் புள்ளினங்காள் பாடல்.
பாடியவர் நம்மோட இப்போ இல்ல, உங்கள் பாடல் என்றுமே மறையாது.
பறவையாய் பறந்துவிட்டிர்கள்.

Bamba Bakiya….

8 - 0

Kandathai Pakir
Posted 2 years ago

அஞ்சு வருஷத்துக்கு முன்ன வாங்குன டிஸ்க் இது. தெரிஞ்ச நண்பர் இந்த படத்த பத்தி அவர் சொல்லி சிரிச்சு, கண்டிப்பா பாருங்கன்னு பரிந்துரையின்படி வாங்குனது. ஏனோ கொஞ்சம் பாத்து அப்புறம் பாக்கலாம்னு இத்தனை வருஷம் கழிச்சு பாத்தேன்.
ஜாலியா காமெடியா போன பேய் படம், க்ளைமேக்ஸ்ல கலங்கவெச்சிட்டாங்க. ஸ்பெஷலி பீமாக் ஆக்ட்டிங்.
இன்னசென்ட் காதலனா, உயிர துச்சமா மதிக்கிற கணவனா, நல்ல நடிகனா தெரிஞ்சார்.

குடும்பத்தோட ஜாலியா பாக்கலாம். காதல்ல பிரிவு இருக்குறவங்க இந்த படத்த பாத்தா, சேர வாய்ப்பிருக்கு.

Pee mak - 2013

8 - 0

Kandathai Pakir
Posted 2 years ago

Prathap pothan
1952 - 2022
Rest in peace.

6 - 0

Kandathai Pakir
Posted 2 years ago

தந்தை தின நல்வாழ்த்துக்கள்.

9 - 2

Kandathai Pakir
Posted 2 years ago

Many returns #maestro #ilayaraaja

8 - 0

Kandathai Pakir
Posted 3 years ago

Deepest condolences
Salim Ghouse - #VetriVizha #ThirudaThiruda #chinnaGounder #Dharmaseelan

3 - 0